ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நாளை புதன்கிழமை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளார்
இங்கு வரும் அவர் நாளை மதினம் 2 மணியளவில் சாவகச்சேரியில் தனது பிரச்சார கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளார்.
இதைத் தொடர்ந்து நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம், தாவடி வேலுவிநாயகர் விளையாட்டு கழகம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை வட்டுக்கோட்டை வழக்கம்பரை அம்மன் கல்யாண மண்டபம், மானிப்பாய் பிரதேசசபை பொதுக்கூட்டம், சாவற்காடு மகாத்மா சனசமூக நிலையம், காங்கேசன்துறை இராஜேஸ்வரி மண்டபம், உடுப்பிட்டி சித்திவிநாயகர் கல்யாண மண்டபம், இராஜகிராமம்- நெல்லியடி, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை அனுசா கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கும் பிரச்சார கூட்டங்களில் கலந்த கொள்வார்.
பின்னர் 3ஆம் திகதி கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வார்.
Post a Comment