13 வயது சிறுமி துஸ்பிரயோகம்!! -தந்தை, தாய் உட்பட 3 பேர் கைது: ஒருவர் தலைமறைவு- - Yarl Thinakkural

13 வயது சிறுமி துஸ்பிரயோகம்!! -தந்தை, தாய் உட்பட 3 பேர் கைது: ஒருவர் தலைமறைவு-

13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அச் சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவுசும், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு  கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் 19 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு சட்டத்திற்கு முரணான முறையில் திருமணம் முடித்து வைத்துள்ளர்.

இதன் பின்னர் சில மாதங்களில் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். இந் நிலையில் சிறுமியின் மாமியாருக்கு இது தெரிய வந்ததையடுத்து அவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திருமணம் முடித்த 19 வயது இளைஞரையும் சிறுமியின் தந்தை, தாயார் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை தலை மறைவாகியுள்ள சிறுமியின் மாமியாரின் கணவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன், சிறுமியின் தந்தை, தாயார் உட்பட 3 வரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் கடந்த புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post