கிளிநொச்சி முருகன் ஆலயத்தில் திருட்டு!! -சுவாமி சிலை உள்ளிட்ட 10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அபேஸ்- - Yarl Thinakkural

கிளிநொச்சி முருகன் ஆலயத்தில் திருட்டு!! -சுவாமி சிலை உள்ளிட்ட 10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அபேஸ்-

கிளிநொச்சி - விவேகானந்த நகர் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கருவறையில் இருந்த வேல் மற்றும் சுவாமி சிலைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று இரவு ஆலயத்தின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு உள் இறங்கிய திருடர்களால் சிலைகளுடன் ஆலயத்தின் பயன்பாட்டில் உள்ள பல பொருட்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post