இன்று 10 மணிமுதல் 55 மணிநேர ஊடரங்கு!! -நாடு முழுவதும் கடுமையான முறையில் அமுல்- - Yarl Thinakkural

இன்று 10 மணிமுதல் 55 மணிநேர ஊடரங்கு!! -நாடு முழுவதும் கடுமையான முறையில் அமுல்-

இன்று இரவு 10 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரைக்கு விலக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து 55 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் கடுமையான முறையில் அமுலில் இருக்கும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜுன் 6 சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post