சுமந்திரனை தோற்கடிப்போம்!! -கிளநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள்- - Yarl Thinakkural

சுமந்திரனை தோற்கடிப்போம்!! -கிளநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள்-

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பல வீதிகளில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத்த போராட்டம் தொடர்பில் சர்சையான கருத்தினை வெளியிட்டிருந்தார்.

அவருடைய கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரை கட்சியின் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்குமாறும் தமிழ் தேசியக கூட்மைப்பின் பங்காளி கட்சிகளால் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கிளிநொச்சியில் சுமந்திரனுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய சுமந்திரரை தோற்கடிப்போம் என்று எழுதப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்களுக்கு தமிழ் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள் என்று உரிமை கோரப்பட்டுள்ளது.
Previous Post Next Post