சுமந்திரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்!! -சம்மந்தர், மாவைக்கு கடிதம்- - Yarl Thinakkural

சுமந்திரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்!! -சம்மந்தர், மாவைக்கு கடிதம்-

இலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் சூ.சேவியர் குலநாயகம், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும், அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலும் தனிப்பட்ட நிலைப்பாடுகள் யாருக்கும் இருக்க முடியும்.

ஆனால் இனவிடுதலை சுதந்திரம் போன்றவற்றை இலக்காக கொண்டு செயற்படுகின்ற இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்துக் கொண்டு கூட்டுப்பொறுப்பை மீது சுமந்திரன் அவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இவ்வாறு விடுதலைப் புலி எதிர்ப்பு கருத்தை வெளியிட்டமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதைப்போன்று, சுமந்திரனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post