டிப்பருடன் மோதிய அம்புலன்ஸ்!! -கொரோனா சந்தேக நபர்களுடன் யாழ் வந்த போது கொடிகாமத்தில் சம்பவம்- - Yarl Thinakkural

டிப்பருடன் மோதிய அம்புலன்ஸ்!! -கொரோனா சந்தேக நபர்களுடன் யாழ் வந்த போது கொடிகாமத்தில் சம்பவம்-


கிளிநொச்சி இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொரோனா சந்தேக நபர்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் சற்று முன் கொடிகாமம் புத்தூர் சந்தியில் நடந்துள்ளது.

ஏ-9 வீதியால் கொரோனா சந்தேக நபர்களுடன் வந்த அம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் சென்ற டிப்பர் திடீரென திரும்பிய போது அம்புலன்ஸ் வாகனத்துடன் மோதியுள்ளது.

அம்புளன்ஸ் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு வேறு அம்புலன்ஸ் வாகனம் வரவளைக்கப்பட்டு அதில் ஏற்றி நோயாளிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post