சீன தூதர் திடீர் மரணம் - Yarl Thinakkural

சீன தூதர் திடீர் மரணம்

இஸ்ரேலுக்கான சீன தூதர் வடக்கு டெல் ஆவிவ்-ல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதராக இருந்தவர் டு வெய் (வயது 58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதராக நியமனம் செய்யப்பட்டார்.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் சீனா சில உண்மைகளை மறைக்கிறது என்று அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு டு வெய் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்டனம் தெரிவித்திருந்த இரண்டாவது நாளில் டு வெய் உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post