மின்வெட்டு அறிவித்தல்!! -யாழில் தடைப்படும் பகுதிகள் அறிவிப்பு- - Yarl Thinakkural

மின்வெட்டு அறிவித்தல்!! -யாழில் தடைப்படும் பகுதிகள் அறிவிப்பு-

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் வடமாகாண பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி கைதடி , நுணாவில், மட்டுவில் வாகையடி, நாவற்குழி, கோவிலாக்கண்டி, தச்சந்தோப்பு, மறவன்புலவு, அறுகுவெளி, தனங்கிளப்பு, வெற்றிலைக்கேணி, பூதர்மடம் ஆகிய பகுதிகளிலும்,
கோப்பாய் – மானிப்பாய் வீதி, கோப்பாய் – கைதடி வீதி, கோப்பாய் பருத்தித்துறை வீதி , கோப்பாய், கல்வியங்காடு, கல்வியங்காடு பாற்சாலை, கட்டைப்பிராய், இருபாலை, வசந்தபுரம், கிளுவானை, ஜிபிஎஸ் வீதி, இராமலிங்கம் சந்தி, ஆடியபாதம் – நல்லூர் வீதி, கிளிக்கடை, ஆடியபாதம் வீதி, இராமலிங்கம் – ஆடியபாதம் சந்தி, கோவில் வீதி – சங்கிலியன் வீதி சந்தி, நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு பிரதேசம், நாவலர் வீதி, கனகரட்ணம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டி வீதி வரை, பாரதி வீதி, புறுடி வீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கண்டி வீதியில் கச்சேரியிலிருந்து கண்டிவீதி செம்மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

இலந்தைக்குளம், புங்கன்குளம், முல்லை, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு, செல்லர் வீதி, மாகியப்பிட்டி, அளவெட்டி, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற பகுதிகளில் இது நடமுறைப்படுத்தப்படும்.

மேலும் பனை அபிவிருத்தி சபை, சங்கன் தனியார் கட்டடம், சித்த ஆயுர்வேத பல்கலைகழகம், நாராயணா சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை, யுனைட்டெட் மோட்டார்ஸ் பல்தேசிய கம்பனி, வடக்கு பிரதம செயலாளர் செயலகம், யாழ் மாநகரசபை அலுவலகம், வடக்கு கல்வியமைச்சு அலுவலகம், கார்ட்டன் ஸ்போர்ட் நெட்வேர்க், அரியாலை டீசல் அண்ட் என்ஜியினரிங், பிஎல்சி, எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமம், லிங்க் ரெடி மில்ஸ் பிரைவேட் லிமிட்ரெட், பல்கலைகழக வணிகப்பிரிவு ஆகியவற்றிலும் மின்வெட்டு நடமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post