சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!! -குரங்கில் பரிசோதனை வெற்றி- - Yarl Thinakkural

சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!! -குரங்கில் பரிசோதனை வெற்றி-

கொரோனா தடுப்பு மருந்தை சீனா வெற்றிகரமாக கண்டு பிடித்து உள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் கண்டுபிடித்த மருத்தை குரங்குகில் பரிசோதனை செய்து அந்நாட்டு விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும்  பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பல நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடியை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக இத்தாலியும் அறிவித்துள்ளன. 

இந்த நிலையில்  சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பெய்ஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய பின்பு மூன்று வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.

ஒரு வாரம் கழித்து சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. 

இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளது.
Previous Post Next Post