பொலிஸாருக்கே பிளைக்கில் சாராயம் வித்த முதியவர்!! -கோப்பாயில் சம்பவம்- - Yarl Thinakkural

பொலிஸாருக்கே பிளைக்கில் சாராயம் வித்த முதியவர்!! -கோப்பாயில் சம்பவம்-

சிவில் உடையில் சென்ற பொலீஸாருக்கே முதியவர் ஒருவர் 500 ரூபாவுக்கு சாராயம் விற்பனை செய்துள்ளார்.

கோப்பாய் மத்திய பகுதியில் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

இதன் அடிப்படையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்படி முதியவர் 500 ரூபாவுக்கு மதுபான போத்தலில் விற்பனை செய்ய முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post