காதலனுக்கு வெங்காயம் அனுப்பிய காதலி - Yarl Thinakkural

காதலனுக்கு வெங்காயம் அனுப்பிய காதலி


காதலனை பழிவாங்க ஒரு தொன் வெங்காயத்தை காதலி அனுப்பி வைத்த வேடிக்கையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார்.

தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்த போது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்நிலையில் காதலன் இந்த பிரிவுக்கு வேதனைப்படவில்லை என நண்பர்கள் மூலம் காதலிக்கு தெரிய வந்ததையடுத்து அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உடனே 1000கிலோ வெங்காயத்தை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அதில் ஒரு கடிதத்தையும் அவர் இணைத்திருந்தார். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன். இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது.
Previous Post Next Post