கடற்படையினருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு!! -சவேந்திர சில்வா- - Yarl Thinakkural

கடற்படையினருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு!! -சவேந்திர சில்வா-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கடற்படை சிப்பாய்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்றும் வெலிசர கடற்படை முகாமின் சிப்பாய்கள் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 863ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரையில் 533 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 321 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post