கொரோனா அச்சத்திற்குள் வெலிசர முகாம்!! -அனைத்து கடற்படையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- - Yarl Thinakkural

கொரோனா அச்சத்திற்குள் வெலிசர முகாம்!! -அனைத்து கடற்படையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-

வெலிசர கடற்படை முகாமில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக அங்கிருந்து அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பபபட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அவர்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிசர முகாமில் சுமார் 4000 கடற்படையினர் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அங்கு நெருக்கமான விதத்தில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 ற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரே அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post