தலைமுடியை தானம் செய்த ஹிருணிகா!! - Yarl Thinakkural

தலைமுடியை தானம் செய்த ஹிருணிகா!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போலி சிகை செய்யும் திட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை வெட்டி கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ள அவர்:-

“புற்றுநோய் இது அந்நோயாளிக்கு மட்டுமல்லாது அவரது அன்புக்குரியவருக்கும் ஒரு அச்சுறுத்தும் , கொடூரமான, துக்ககரமான நோயாகும்.  ஆம். அவர்களது வலியை எங்களால் நீக்க முடியாது தான் ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணமாவது அவர்களை மகிழ்விக்க முடியும்.

எனவே நான் எனது தலைமுடியை ஒரு புற்றுநோயாளிக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். அந்த தலைமுடி என்னை விட அவருக்கே அதிகமாக தேவைப்படும்.

பெண்களாகிய உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் உங்கள் தலை முடியை வெட்ட நினைத்தால், அதனை தூக்கி எறிய வேண்டாம். தயவுசெய்து அதை தேவையானவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவும். நன்றி ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post