இளைஞரை ஓட ஓட சுட்ட இராணும்!! -வடமராட்சியில் சம்பவம்- - Yarl Thinakkural

இளைஞரை ஓட ஓட சுட்ட இராணும்!! -வடமராட்சியில் சம்பவம்-

வடமராட்சி மந்திகைப் பகுதியால் மோட்டார் சைக்கிலில் சென்று இளைஞர் மீது இராணுவத்தினர் சரமாரியான துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் சிகிச்சை;ககாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலோலி மாவடி, முராவில் பகுதியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 23) என்பவரே இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

நேற்று இரவு ஊரடங்கு வேளையில் 10:30 மணியளவில் மந்திகைச் சந்தியில் காவல்க் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதி வழியாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்த இருவரும் இராணுவத்தினன் ஒருவரை கையில்த் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது இராணுவத்தினன் ஒருவர் கையில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இராணுவம் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின் ஒரு மணித்தியாலத்தில் சுமார் 11:30 மணியளவில் வேறு மோட்டார் சைக்கிள் அதே பகுதியால்ப் பயணித்துள்ளது, அதனை இராணுவத்தினர் சைகை காட்டி மறித்திள்ளனர், குறித்த சைகையை மதிக்காது இளைஞன் தொடர்ந்து பயணித்துள்ளார், இதனையடுத்து குறித்த இளைஞனன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த இளைஞருடைய செஞ்சுப் படிகுதி, இடது கை மற்றுமு; கால் ஆகிய உடலின் 3 பாகங்களில் துப்பாக்கி தேட்டாக்கள் துளைத்துச் சென்றுள்ளது என்று மருத்துவ மனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post