முன்னாள் போராளி வீடு புகுந்து தாக்கிய இராணுவம்!! -வடமராட்சியில் சம்பவம்- - Yarl Thinakkural

முன்னாள் போராளி வீடு புகுந்து தாக்கிய இராணுவம்!! -வடமராட்சியில் சம்பவம்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியில் நேற்று இரவு முன்னாள் போராளி ஒருவருடைய வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இச் சம்பவத்தில் வயோதிப பெண்மணி உட்பட பலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கைவிட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post