முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முனைப்பு!! -பல வழிகளிலும் முயட்சிக்கும் பொலிஸ்- - Yarl Thinakkural

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முனைப்பு!! -பல வழிகளிலும் முயட்சிக்கும் பொலிஸ்-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்:-

இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் என்னை அழைத்திருந்தனர்.

அதற்கமைக உடனடியாகவே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தபோகிறீர்களா?

எவ்வாறு நடத்தப்போகிறீர்கள்? என்ன நேரத்திற்கு நினைவேந்தல் ஒழுங்கமைத்துள்ளீர்கள்? என பொலிஸார் வினவினர்.

ஆம் நினைவேந்தல் நடக்கும். நான் பங்குகொள்வேன். காலை 9 மணிக்கு நான் அங்கு செல்வேன். சுகாதாரதுறையினர் அறிவுறுத்தியதன்படி

சமூக இடைவெளியை பேணி நினைவேந்தல் நடாத்தப்படும் என கூறியிருந்தேன். அதற்குமேல் பொலிஸார் என்னிடம் எதனையும் கேட்கவில்லை என்றார்.

Previous Post Next Post