யாழ் உடுவிலில் பெற்றோல் குண்டு தாக்குதல்!! - Yarl Thinakkural

யாழ் உடுவிலில் பெற்றோல் குண்டு தாக்குதல்!!

யாழ் உடுவில் - அம்பலவானவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் வீட்டின் சில பகுதிகள் சேதமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post Next Post