கொரோனாவல் சாவடைந்த பெண் குறித்து அதிர்ச்சி தகவல்!! -நேற்றுதான் வைத்திசாலைக்கே சென்றாராம்- - Yarl Thinakkural

கொரோனாவல் சாவடைந்த பெண் குறித்து அதிர்ச்சி தகவல்!! -நேற்றுதான் வைத்திசாலைக்கே சென்றாராம்-

கொரோனா தொற்றினால் இன்று மதியம் மரணமான பெண் நேற்று இரவுதான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக அவர் நோய் வாய்ப்பட்டிருந்துள்ள அதேவேளை, கடுமையான சுவாசப் பாதிப்பு அவருக்கு இருந்துள்ளது. எனினும், அவர் சிகிச்சைக்கு செல்லவில்லை.

ஒரு மாத அவஸ்தைக்கு பின்னர், நேற்று அவரது நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, நேற்றிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, இன்று அதிகாலை 1 மணியவில் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்,
இன்று நண்பகல் 12.50 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post