பாடசாலைகள் திறப்பால் அதிகரித்த கொரோனா!! - Yarl Thinakkural

பாடசாலைகள் திறப்பால் அதிகரித்த கொரோனா!!

டென்மார்க்கில் பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்பு தான் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து ஐரோப்பிய நாடான டென்மார்க் ஒரு மாதம் ஊரடங்கை அமுல்படுத்தியது. எனினும் ஊரடங்கை சில முக்கிய நிபந்தனைகளுடன் கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் தளர்த்தியது.

அன்று முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளில் மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் எளிதில் தொற்றாது என்று வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பாடசாலைகள் திறந்த பின்பு கொரோனாவின் தாக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டது. அப்போது பாடசாலைகள் திறப்புக்கு பின்பு ஊரடங்கு காலத்தில் இருந்ததை விட கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகமாகி இருப்பது தெரியவந்தது. அதாவது அந்நாட்டில் ஒருவர் வைரஸை பரப்பும் சதவீதம் 0.6இலிருந்து 0.9சதவீதமாக உயர்ந்துள்ளது.

Previous Post Next Post