கடற்கரும்புலி அங்கையற்கண்ணிக்கு அஞ்சலி!! -சிறிதரனை விசாரணைக்கு அழைத்த பொலிஸ்- - Yarl Thinakkural

கடற்கரும்புலி அங்கையற்கண்ணிக்கு அஞ்சலி!! -சிறிதரனை விசாரணைக்கு அழைத்த பொலிஸ்-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தலைவர் அ.வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருக்கின்றார்.

மார்ச் 8 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மகளீர்தின நிகழ்வில் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அங்கையற்கண்ணியின் உருவப்படத்துக்கு சிறீதரன் மாலை போட்டதாகவும், அது குறித்தே விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் கிளிநொச்சி பொலிஸார் சிறீதரனுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

இருந்த போதிலும், பொலிஸார் குற்றஞ்சாட்டுவது போல தான் மாலையிடவில்லை எனத் தெரிவித்திருக்கும் சிறீதரன், இச்சம்பவம் தொடர்பில் ஒரு மாதத்துக்கு முன்னரும் தான் அழைக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
Previous Post Next Post