“இறுதி சொட்டு இரத்தமும் மண்ணுக்காக” -பிரபாகரன் மனதில் இருந்த வாசகம்- - Yarl Thinakkural

“இறுதி சொட்டு இரத்தமும் மண்ணுக்காக” -பிரபாகரன் மனதில் இருந்த வாசகம்-

நேதாஜி சொன்ன “எனது கடைசி சொட்டு இரத்தம் சிந்தும் வரை எனது மண்ணின் சுதந்திரத்திற்காக போராடுவேன்” என்ற வார்த்தை தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனை கவர்ந்தது.

இவ்வாறு பிரபாகரனுடனான நினைவுகளை டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். பைனான்சியல் டைம்ஸ் இல் அவர் உழுதிய கட்டுரையிலேயே மேற்படி விடயத்தை வர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அக் கட்டுரையில் மேற்படி விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்:-

இளம் பிரபாகரன் தெளிவான ஞாபக சக்தியும் ஆர்வமும் கொண்ட வாசகர். வரலாற்றுப் போர்கள் மற்றும் வரலாற்று பிரபலமானவர்கள் பற்றி – வரலாற்றைப் படிப்பதில் அவர் மிகவும் விருப்பம் கொண்டவர்.

இந்திய சுதந்திரப் போராட்டம் அவரைக் கவர்ந்தது. அவர் தனது இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான ‘சத்தியசோதனை’ தமிழ் பதிப்பைப் படித்திருந்தார் . ஆனால் அதிலும் அகிம்சைகொள்கையிலும் அவர் அதிகளவு ஈர்க்கப்படவில்லை.

பிரபாகரன் சிறந்த தலைவராக வரித்துக்கொண்டவர் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஸ் சந்திரபோஸ் ஆவார். ஒரு கட்டத்தில் நேதாஜி, காந்தியின் “அகிம்சை” யை மறுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க இந்திய தேசிய இராணுவத்தை (ஐ.என்.ஏ) உருவாக்கினார்.

நேதாஜியின் புகழ்மிக்க அறிவிப்பு: “எனது கடைசி சொட்டு இரத்தம் சிந்தும் வரை எனது மண்ணின் சுதந்திரத்திற்காக போராடுவேன்.” என்பதாகும். இந்த உணர்வுகளுக்கு பிரபாகரன் முழு மனதுடன் இடமளித்திருந்தார் என்றுள்ளது.
Previous Post Next Post