கொரோனா மருந்து: இறுதி கட்டத்தில் இஸ்ரேல் - Yarl Thinakkural

கொரோனா மருந்து: இறுதி கட்டத்தில் இஸ்ரேல்

கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சசர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா எதிர்ப்பு மருந்து மனித உடலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Previous Post Next Post