செவ்வாய் முதல் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை!! - Yarl Thinakkural

செவ்வாய் முதல் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை!!

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அனுமதி வழங்கப்பட்டால் செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post