கடுமையான ஊடரங்கு இது: வீட்டை விட்டு வெளிவர வேண்டாம்!! -திடீர் சோதனை நடக்கும்: அஜித்ரோகன எச்சரிக்கை- - Yarl Thinakkural

கடுமையான ஊடரங்கு இது: வீட்டை விட்டு வெளிவர வேண்டாம்!! -திடீர் சோதனை நடக்கும்: அஜித்ரோகன எச்சரிக்கை-

இன்று இரவு 8 மணியில் இருந்து நடமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் என சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை எவரும் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களை கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னமும் நடைமுறையில் உள்ளதால் இந்த பகுதிகளில் அடுத்த வாரம் முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மக்கள் சமூகவிலக்கல் நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிலபகுதிகளில் திடீர் சோதனைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post