வடமராட்சியில் சட்டவிரோதா கடற்றொழில்!! -தடுத்து நடவடிக்கை எடுக்க டக்ளஸ் பணிப்பு- - Yarl Thinakkural

வடமராட்சியில் சட்டவிரோதா கடற்றொழில்!! -தடுத்து நடவடிக்கை எடுக்க டக்ளஸ் பணிப்பு-

வடமராட்சி கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடற்தொழிலை தடுத்து இயல்பான கடற்றொழிலை மேற்கொள்ள வழிவகை செய்து தருமாறு வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர் சம்மேளனங்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தன.

இந்நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களது நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் அந்த பகுதியில் தொழிலை மேற்கொள்ளும் அனைத்து படகுகளுக்கும் அவற்றின் இலக்கம் மற்றும், மீன்பிடி அனுமதி என்பன அந்த பகுதிகளின் துறைசார் காரியாலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
Previous Post Next Post