வடகொரியாவுக்கு உதவும் சீனா - Yarl Thinakkural

வடகொரியாவுக்கு உதவும் சீனா
கொரோனா வைரஸை எதிர்த்து போராட வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தற்போது 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருந்தாலும் சீனாவின் அயல் நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்திலேயே வடகொரியா, தனது எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு தடைவிதித்தது. இதன் மூலம் தங்கள் நாடு கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுக்க முடிந்ததாக வடகொரியா கூறுகிறது.

இதனிடையே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்காக சீனாவுக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் கிம் ஜோங் உன்னின் வாழ்த்து செய்திக்கு பதிலளித்துள்ள ஜின்பிங், வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸை எதிர்த்து போராட வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post