கொரோனா தொற்று!! -வல்வெட்டித்துறை வாசி லண்டனில் பலி- - Yarl Thinakkural

கொரோனா தொற்று!! -வல்வெட்டித்துறை வாசி லண்டனில் பலி-

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட சதீஸ்குமார் என்பவர் லண்டனிற்கு சென்று அங்கு வசித்துவந்திருந்தார்.

அங்கு வநித்த அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த போதும், அவர் சிகிச்சையின் பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post