மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ஆம்பான் புயலால் விமான நிலையம் வெள்ளத்தில் மிதந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆம்பான் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. இதனால் அங்கு சுமார் 6மணி நேரம் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 120கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலில் சிக்கி இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புயல் கல்கத்தா விமான நிலையத்தின் கட்டமைப்புக்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக விமான நிலைய கட்டடங்கள், ஓடு பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.