கொரோனாவால் சாவடைந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் நேற்றிரவு நிறைவு!! - Yarl Thinakkural

கொரோனாவால் சாவடைந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் நேற்றிரவு நிறைவு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 10 ஆவது நோயாளி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்திருந்தார். 

குவைத்திலிருந்து நாடுதிரும்பிய திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலத்தை நேற்று இரவே அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

Previous Post Next Post