பாஸ்ப்போர்ட் ஆப்பீஸ் நாளை முதல் இயங்கும்!! -ஒன்லைன், போன் ஊடாக முன்பதிவு செய்யலாம்- - Yarl Thinakkural

பாஸ்ப்போர்ட் ஆப்பீஸ் நாளை முதல் இயங்கும்!! -ஒன்லைன், போன் ஊடாக முன்பதிவு செய்யலாம்-

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நாளை முதல் மக்கள் சேவைக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சேவைகளை பெறுவதகாக பொதுமக்கள் அலுவலகத்திக்கு வரும் போது கண்டிப்பாக சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடவுச்சீட்டு பெறுவதற்கான (ஒருள் சேவை, சதாரண சேவை) விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளுதல், கடவுச்சீட்டில் மாற்றங்கள் செய்தல், பிரஜாவுரிமைப் பதிவுகள் மற்றும் விசா நீடிப்பு போன்ற சேவைகளை மேற்கொள்ள முடியும்.

முக்கியமாக இந்தச் சேவைகளை பெறுவதற்கு மக்கள் முன்கூட்டியே தமக்கான நேரத்தினை தொலைபேசி அல்லது இணையம் மூலமாக முற்பதிவு செய்ய வேண்டும் எனவும், முற்பதிவுகள் வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post