14.05.2020 கொரோனாவுக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமானதா? - Yarl Thinakkural

14.05.2020 கொரோனாவுக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமானதா?இலங்கையில் கொரோனா தாக்கம் ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதா என்ற கேள்வி இப்போது பலரிடம் எழுகின்றது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல ஆயிரத்தை நெருங்கிவருகின்றது. ஆனாலும் நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டு அரச அலுவலம்இ தனியார் அலுவலகம்இ போக்குவரத்துஇ வியாபாரம்இ என் பல்வேறு துறைகளும் சகஜ நிலைக்குத் திரும்பிவருகின்றது.

தடைசெய்யப்பட்டிருந்த மதுபான சாலைகளும் திறக்கப்பட்டு நீண்ட வரிசையில் குடிமக்கள் காத்திருக்கும் காட்சிகளை நேற்று காணக்கூடியதாக இருந்தது.

ஆனாலும் சுகாதாரப் பகுதியினரோ தொடர்ச்சியாக  கொரோனா ஆபத்துக் குறித்து எச்சரிக்கைகளை வெளிப்படுத்தினாலும் இலங்கையில் சமூகத் தொற்று ஆபத்தில்லை என்பதாகவே அறிக்கைகள் வெளியாகின்றன.
ஆனாலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமோ இயல்பு நிலைக்கு நாடுவருவதை பூரணமாக ஆதரிக்கவில்லை என்பதை அச் சங்கத்தின் உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் வெளிப்படத்தும் கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கை கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவ்வாறான நிலையில் மறுபுறத்தில் கொரோனாவை தாண்டி எப்படி பொதுத் தேர்தல் நடத்தி முடிப்பதென்ற கரிசனையில் அரசாங்கம் ஆழமாக ஆராயத் தொடங்கியிருக்கின்றது.

இதற்கு நாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாத் தாக்கம் ஏற்பட்டமை தேர்தல் நடவடிக்கைகளில் தாக்கத்தை செலுத்தியிருந்தது.

இதனை சாதகமாக பயன்படுத்திய எதிர்க் கட்சிகள் மீண்டும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டவேண்டும் என்ற அழுத்தங்களை பிரயோக்கிக்க ஆரம்பித்தமை அரசுக்கு பெரும் தலையிடியை கொடுத்திருக்கிறது.
இவ் அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கு உடன் தேர்தலை நடத்துவதே வழி என்ற நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறன்றமை ஒரு புறம் கொரோனா தாக்கத்தால் தேர்தல் தள்ளிப் போகும் பட்சத்தில் நாட்டில் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அரசாங்கத்தின் செல்வாக்கை மக்களிடம் குறைத்துவிடும் என்ற அரசின் பயம் மறுபுறம் என பொதுத் தேர்தலை எப்படியும் நடத்திமுடித்துவிடுவதே இவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி என அரசாங்கம் திடமாக நம்புகின்றது.
இந்நிலையில் தேர்தல் நடத்தப்படுவது மக்களை ஆபத்தில் சிக்கவைப்பதாகவே முடிந்துவிடும் ஆகவே பாராளுமன்ற கூட்டுவதே பொருத்தமானது என்ற வாதத்தை முன்வைத்து அரசுக்கு நெருக்குதல்களை கொடுக்க ஆரம்பித்து விட்டது எதிர்க்கட்சி.
கொரோனா தாக்கம் ஆரம்பத்திலிருந்து செல்லும் போக்கு இலங்கையில் கொரோனா பரவல் குறைவடைந்திருப்பதற்கான சாத்தியத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.
ஆயினும் ஆளும் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தம் கொரோனாவை தாண்ட பொதுத் தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

இதனால் கொரோனா தாக்கத்துக்குள்ளும் எப்படி பாதுகாப்பாக தேர்தலை நடத்த முடியும் என்பது குறித்த கரிசனைகள் அரசிடம் காணப்படுகின்றன. தேர்தல் நெருங்குவதற்கு முன்னர் கொரோனா தாக்கம்அதிகரித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது.
ஆனாலும் சுகாதாரத் துறையினது பூரணமான சம்மதமின்றி தேர்தலை நடத்துவது மக்களுக்கு பாதுகாப்பானதான அமையாது என்பதே உண்மை.
ஜெ-ஜெ
Previous Post Next Post