தவறை ஒப்புக்கொண்ட சீனா - Yarl Thinakkural

தவறை ஒப்புக்கொண்ட சீனா
தங்கள் சுகாதார அமைப்பில் இருந்த பலவீனங்களை கொரோனா வைரஸ் அடையாளம் காட்டியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் இயக்குநர் லீ பின் சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சீனா இப்படி தனது பிழைகளை ஒப்புக் கொள்வது மிகவும் அரிதானது. நோய்த்தடுப்பு, பொது சுகாதாரம், தரவுகளை திரட்டுதல் ஆகிய விடயங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா உலகளாவிய தொற்றை சமாளிப்பதற்கு வடகொரியாவுக்கு சீனா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று சீனாவின் ஆட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய போது அதன் ஆரம்ப கட்ட அறிகுறிகளுக்கு மிக மெதுவாக எதிர்வினை ஆற்றியதாகவும், சர்வதேச சமூகத்தை விரைவாக எச்சரிக்க தவறி விட்டதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post