யாழின் பி.சி.ஆர் பரிசோதனை குறித்து புரளி கிளப்புவோர் மீது நடவடிக்கை!! -சத்தியமூர்த்தி எச்சரிக்கை- - Yarl Thinakkural

யாழின் பி.சி.ஆர் பரிசோதனை குறித்து புரளி கிளப்புவோர் மீது நடவடிக்கை!! -சத்தியமூர்த்தி எச்சரிக்கை-

யாழில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நடக்கும் பி.சி.ஆர் ஆய்வுகூட பரிசோதனை தொடர்பில் பழையான நோக்கங்களுக்காக வதந்திகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று புதன்கிழமை நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

உலக சுகாதா ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தரத்திற்கு ஏற்பவே யாழில் உள்ள மருத்துவபீடம் மற்றும் போதனா வைத்திய சாலை ஆகியவற்றில் உள்ள இரு ஆய்வுகூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு நடைபெறும் பரிசோதனைகள் தொடர்பில் பதட்டம் அடையத் தேவையில்லை.

பல்கலைக்கழகங்களுக்கு ஒரு கடப்பாடு உள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகம் சார்ந்த சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் அல்லது மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வுகளை செய்து, அதன் உண்மை நிலையை அல்லது அதன் பாதிப்புக்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது.

அதனை மருத்துவபீடம் மிக சிறப்பாக செய்து வருகின்றது. இந் நடவடிக்கைக்கு யாரும் தடையாக இருக்க கூடாது. இருப்பினும் ஒரு சிலர் பழையான நோக்கங்களோடு வாந்திகளை பரப்பி, பரிசோதனை நடவடிக்கைகளை தடுக்க முற்படக்கூடும்.

அவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடபகுதியைப் பொறுத்தவரையிலும், வைத்திய சேவையை பொறுத்தவரையிலும் யாழில் நடத்தப்படும் ஆய்வுகூட பரிசோதனை என்பது ஒரு முக்கியமான செயற்பாடாகும் என்றார்.
Previous Post Next Post