கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு!! - Yarl Thinakkural

கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு!!

யாழ் பாபாஜி யோக சங்கம் மற்றும் இணையும் கரங்கள் அமைப்பு இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு பொதிகள் வழங்கும் திட்டம் மூன்றாம் கட்டமாக மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் மேற்பார்வையில் சிவன் பண்ணை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

j.79, j.80, j.81 ஆகிய கிராம சேவக பிரிவுக்குட்பட்ட தாய்மார்களுக்கான 2500 ரூபாய் பெறுமதியான உலர் சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் பிரதேசத்துக்குட்பட்ட குடும்ப நல தாதியர்கள் பங்குபற்றி தாய்மார்களுக்கான தற்போதைய நிலைமை தொடர்பாக சுகாதார விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க பட்டன.

Previous Post Next Post