கொரோனா சதேகத்தால் இருவர் மீது தாக்குதல்!! -யாழ் கடற்படை சிப்பாயின் உறவினர்களுக்கு நடந்த விபரீதம்- - Yarl Thinakkural

கொரோனா சதேகத்தால் இருவர் மீது தாக்குதல்!! -யாழ் கடற்படை சிப்பாயின் உறவினர்களுக்கு நடந்த விபரீதம்-

யாழில் கடமையாற்றும் கடற்படை சிப்பாயின் தந்தையும், சகோதரரும் தாக்குதலுக்கு உள்ளாக்கட்ட நிலையில் சிகிச்சைக்காக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் கடற்படை சிப்பாய் உறவினர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோனா இருக்கும் என்பதினாலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

வாரியபொல நெட்டிய பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவரின் தந்தை மற்றும் அவரது சகோதரர் மீது தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் வாரியபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் கடமையாற்றும் வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படை சிப்பாயின் குழந்தை சுகவீனமுற்றிருந்ததால், அதற்கு தேவையான மருந்தைக் கொள்வனவுச் செய்வதற்காக குறித்த இருவரும் மருந்தகம் ஒன்றுக்கு சென்றபோதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்விருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகித்து, சிலர் தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.

கடற்படை சிப்பாய் அவரது வீட்டுக்கு இதுவரை வரவில்லை என்றும் அத்துடன், அவர் கொரோனா தொற்றாளராக அடையாளங் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post