குரும்பசிட்டியில் நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல்!! -அச்சத்தில் மக்கள்- - Yarl Thinakkural

குரும்பசிட்டியில் நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல்!! -அச்சத்தில் மக்கள்-

யாழ்ப்பாணம் வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

இரவு 11 மணியளவில் வீடு புகுந்த நபர்கள்,வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து வீட்டு மின் குமிழ்களை முதலில் அடித்து உடைத்து இருள செய்துள்ளனர்.

பின்னர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொருக்கி உள்ளனர்.

ஊரடங்கு சட்ட நேரத்தில் இவ்வாறு வீட்டுக்குள் புகுந்து சொத்து சேதம் விளைவித்து அட்டகாசம் புரிந்தமை அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post