யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 2 ஆம் நாள் சுடர் எற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கான அச்சலி செலுத்தப்பட்டது.
இன்று இரவு 7 மணியளவில் நடந்த இவ்வஞ்சலி நிகழ்வினை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்படி குறித்த நேரத்திற்கு அங்கு வந்த மாணவர்கள் பல்கலைக்கழக வாசலில் தீபங்களை ஏற்றி உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களை அழைத்து விசாரணை செய்ததுடன், மாணவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்தனர்.
மேலும் மாணவர்களை அடையாளப்படுத்தும் வகையில் பொலிஸார் தமது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.