வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது!! - Yarl Thinakkural

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது!!


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்று அழைத்துவரப்படும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் பலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கடந்த வாரம் இரண்டு விமானங்களில் குவைத்திலிருந்து இலங்கை வந்தவர்கள் நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை நிலையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இதுதொடர்பில ஜனாதிபதி தலைமையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் மத்தியில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை வைரசினை கட்டுப்படுத்துவதற்கான எங்கள் வெற்றிகரமான முயற்சிகளை பாதித்துள்ளது என கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாங்கள் வேறு வழியின்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதை இடைநிறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்ததான வலயம் என மதிப்பிடப்படும் டோகாவிலிருந்து புறப்படவிருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெலராஸ் மெல்பேர்னிலிருந்து புறப்படவிருந்த விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளாhர்.
Previous Post Next Post