பேருந்து, ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்!! -ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிக்கலாம்- - Yarl Thinakkural

பேருந்து, ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்!! -ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிக்கலாம்-

ஊடரங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய குறித்த போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ரயில்களில் ஆசனங்களுக்கு ஏற்றவாறு பயணிகள் பயணங்களை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அனுமதிக்கமைய அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post