பளை முல்லையடியில் ஆட்டோ விபத்து!! -இருவர் காயம்- - Yarl Thinakkural

பளை முல்லையடியில் ஆட்டோ விபத்து!! -இருவர் காயம்-

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முல்லையடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதியான 53 வயதுடை வைரவநாதன் சிவராசா மற்றும் 71 வயதுடைய சுப்ரமணியம் துரைவீரசிங்கம் ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த இருவரும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து இடம்பெற்றமை தொடர்பானந பூர்வாங்க விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post