இத்தாலியில் அடுத்த மாதம் விமான சேவை - Yarl Thinakkural

இத்தாலியில் அடுத்த மாதம் விமான சேவை


கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சர்வதேச பயணத்தை ஜூன் 3ஆம் திகதி முதல் இத்தாலி அனுமதிக்க உள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் ஆரம்ப கட்டத்தில் கடும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. தற்போது அதன் தீவிரம் குறைந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து இத்தாலி அரசு நெருக்கடி நிலையை தளர்த்தி வருகிறது.

இதுகுறித்து இத்தாலி ஊடகங்கள், இத்தாலியில் வரும் ஜூன் மாதம் முதல் சர்வதேச பயணத்தை அனுமதிக்க அரசு ஓப்புதல் வழங்கியது. அதே நாளில் உள்நாட்டிலும் பயணங்கள் மேற்கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post