கொரோனாவின் இரண்டாவது அலையா? -சுகாதார துறையை எச்சரிக்கும் மருத்துவ சங்கம்- - Yarl Thinakkural

கொரோனாவின் இரண்டாவது அலையா? -சுகாதார துறையை எச்சரிக்கும் மருத்துவ சங்கம்-

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அழைத்துவரப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக காணப்படுகின்றார்கள். 

இவ்விடயம் தொடர்பில் சுகாதாரத்துறையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் மிக அவதானத்துடன் இருப்பது கொலரோனா தொற்றால் ஏற்ப்படக்கூடிய இரண்டாவது அலை தாக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக அமையும் எனவும் அச்த சங்கம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post