யாழில் இன்றும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம்!! - Yarl Thinakkural

யாழில் இன்றும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம்!!

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதணைணயுடாக உறுதிப்படுத்தப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஜாஎலயைச் சேர்ந்த  40 வயதுடைய நபருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையல் குறித்த நபர் நேற்று யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.

அவருக்கு இன்று நடத்திய பி.சி.ஆர் பரிசோதணையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.

Previous Post Next Post