விமான போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ள இந்தியா - Yarl Thinakkural

விமான போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ள இந்தியா

இந்திய பயணிகள் விமானங்களை இயக்குவது தொடர்பாக விமான சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமுழு அடைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே உள்நாடு மற்றும் வெளிநாடு பயணியர் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட முழு அடைப்பு 17இல் முடிவுக்கு வருகிறது. அதன்பின் உள்நாட்டு பயணியர் விமான சேவையை ஆரம்பிக்கவும், அதையடுத்து படிப்படியாக வெளிநாட்டு பயணியர் விமான சேவையை ஆரம்பிக்கவும் விமான சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Previous Post Next Post