மல்லாகத்தில் இளம் யுவதி தீயிட்டு தற்கொலை!! -விசாரனையின் போது அதிர்ந்து போன பொலிஸ்- - Yarl Thinakkural

மல்லாகத்தில் இளம் யுவதி தீயிட்டு தற்கொலை!! -விசாரனையின் போது அதிர்ந்து போன பொலிஸ்-


யாழ் மல்லாகம் கொட்டைக் காடு பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் சேர்ந்த சூரியகுமார் தேனுஜா(வயது 26) என்ற இளம் யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக  பெற்றோர்கள் கூறி வந்த்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.

பலத்த தீக்காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post