வெளியில் செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடமுறைகள்!! -பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டிப்பான அறிவுறுத்தல்- - Yarl Thinakkural

வெளியில் செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடமுறைகள்!! -பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டிப்பான அறிவுறுத்தல்-

நாட்டில் நாளை ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு திரும்புபவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய நடமுறைகள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன அறிவித்துள்ளார்.

மேலும் பொது மக்களும் தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்தின்படி நடந்தே வெளியில் செல்ல முடியும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

நாளை முதல் பணிக்கு செல்பவர்கள் மின்னணு ஆவணம் அல்லது பணியிட அடையாள அட்டையை வைத்திருத்தல் கட்டாயமானது.

சொந்த வாகனங்களில் பணிக்கு செல்லும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவும், தனியார் ஊழியர்கள் காலை 8.30 மணியில் இருந்து 10 மணிக்குள்ளும் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும்.

பணியிடத்தில் இருந்து அரச ஊழியர்கள் 3 மணி முதல் 4 மணிக்குள்ளும், தனியார் ஊழியர்கள் 4 மணி முதல் 5 மணிக்குள்ளும் வீடு திரும்ப வேண்டும்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து முச்சக்கரவண்டி மற்றும் வாடகைக்கு அமர்த்திய வாகனங்களில் பயணிக்க அனுமதி.

கட்டுமான தளங்கள், சலூன்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தமது பணியை தொடங்க முடியும்.

ஹோட்டல்களை இயக்க முடியும், ஆனால் உணவங்களுக்கான அனுமதி கிடையாது. சமைத்த உணவு, தேநீர், பழச்சாறு விற்பனை கடைகள், ஜிம்கள் மற்றும் இரவு கிளப்களுக்கு அனுமதி கிடையாது.

தே.அ.அ. இறுதி இலக்க முறையில் நடந்து கடைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். வீதி சோதனை நடவடிக்கையில் அமர்த்தப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் இவற்றை அவதானிப்பாளர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post