பொலிஸ் மீது வாள் வெட்டு!! -நகுலேஸ்வரப் பகுதியில் கோஸ்ரி மோதலை தடுக்க சென்ற போது சம்பவம்- - Yarl Thinakkural

பொலிஸ் மீது வாள் வெட்டு!! -நகுலேஸ்வரப் பகுதியில் கோஸ்ரி மோதலை தடுக்க சென்ற போது சம்பவம்-

வலி.வடக்கு நகுலேஸ்வரனம் கொலனிப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடந்த கோஸ்ரி மோதலை தடுக்கச் சென்ற பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

இச் பம்வம் நேற்று இரவு 11 மணியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்கள் தமக்கிடையில் வாளால் வெட்டி மோதிக் கொள்வதகா பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற. காங்கேசந்துறை பொலிசார் சம்வத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது காங்கேசந்துறை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒரவர் மீதும் வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது காயமடைந்த குறித்த பொலிஸ் சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற மேலதிக பொலிஸார் மோதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொலிஸ் மீது வாள் வெட்டு நடத்திய சம்பவம் தொடர்பில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post