திடீரென வெடித்து சிதறிய பொருள்!! -இரு சிறுவர்கள் காயம்- - Yarl Thinakkural

திடீரென வெடித்து சிதறிய பொருள்!! -இரு சிறுவர்கள் காயம்-

வவுனியாவில் வாழவைத்த குளப் பகுதியில் இன்று நடந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கிய இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதி மக்களின் குடிமனைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. 

முன்னர் இராணுவமுகாம் அமைந்திருந்த பகுதிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இனந்தெரியாத பொருள் ஒன்றினை எடுத்து சுத்தியலால் உடைக்கமுற்பட்டவேளை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post